பெண்ணிடம் கொள்ளை முயற்சி: தாயின் கையில் இருந்து விழுந்து 1½ வயது குழந்தை பலி

mgid start

அரியானா மாநிலத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கற்பழிப்பு முயற்சியில் பெண்ணின் குழந்தையை 3 பேர் கொண்ட கும்பல் கொன்றது.
இந்த நிலையில் உத்தரபிர தேசத்தில் பெண்ணிடம் நடந்த கொள்ளை முயற்சியில் 1½ வயது குழந்தை பலியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
உத்தர பிரதேச மாநிலம். பிஜோனர் மாவட்டம் நங்கல்சோட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முகமது சலீம் என்ப வர் மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் 1½ வயது பெண் குழந்தையுடன் சென்றார். குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் நள்ளிரவு 1.30 மணிக்கு அழைத்து சென்றார்.
அப்போது 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் மறித்து அவர்களை கத்தி முனையில் மிரட்டினார்கள். சலீமை அடித்து உதைத்து ரோட்டில் தள்ளி விட்டனர். பின்னர் அவரது மனைவியிடம் இருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடிக்க முயன்றது.
இந்த கொள்ளை முயற்சியின்போது அந்த பெண்ணின் கையில் இருந்த 1½ வயது பெண் குழந்தை நடுரோட்டில் கீழே விழுந்தது. இதில் அந்த குழந்தை விழுந்த இடத்திலேயே இறந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.