வேலையில்லா பட்டதாரி-2 திரைப்படத்தின் டீஸர் வெளியீடு!

mgid start

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் வேலையில்லா பட்டாதாரி -2 படத்தின் டீஸர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீஸரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளார்.  

2014 ஆம் ஆண்டு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி  படம் சூப்பர் ஹிட்டானது. வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க நடிகர் தனுஷ் முடிவு செய்தார்.  அதனை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் 2016 ஆம் ஆண்டு தொடங்கின.


 VIP-2 திரைப்படத்தை நடிகர் ரஜினியின் மகளும், தனுஷ் மனைவியின் சகோதரியுமான சௌந்தர்யா தனுஷ் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில், ஹீரோவாக நடிகர் தனுஷ், அவருக்கு ஜோடியாக கஜோல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, சரண்யா பொன்வன்னன், அமலாபால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஷீன் ரோல்டன் மற்றும் அனிருத் ரவிசந்தர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். 

இப்போது படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. துனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரகனி, சரண்யா பொன்வன்னன் ஆகியோர் நடித்துள்ளனர்.