2000, 500, 100, 50 போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்..!

mgid start
➤ 2000, 500, 100, 50 போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்..!
➤ பெட்ரோல் பங்குகளில் போலி ரூபாய் நோட்டுகளை மாற்றியது விசாரணையில் அம்பலம்..!

கேரள மாநிலம் திரிச்சூர் அருகே போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக இளைஞர் அமைப்பின் உறுப்பினரான 31 வயதாகும் ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது அண்ணனுக்கு வலைவீசியுள்ளனர். ராகேஷின் வீட்டில் இருந்து ரூ.1.37 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட பயன்படுத்தப்பட்ட எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரகசிய தகவலின் பேரில் ராகேஷின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், கலர் பிரிண்டர், ஸ்கேனர், ரூபாய் நோட்டு கத்தரிக்கும் இயந்திரம், இங்க், பிரிண்டிங் பேப்பர் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பின்பாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000, 500 மற்றும் 100, 50 ரூபாய் நோட்டுகள் பிரிண்டிங் மெஸின் மூலமாக புதிதாக அச்சடிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலி கரன்சி நோட்டுகளை அச்சடித்து அவற்றை ராகேஷ் மற்றும் அவரது அண்ணன் உள்ளிட்டோர் பெட்ரோல் பங்குகளில் மாற்றியது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் பலர் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ள திரிச்சூர் போலீஸ், அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.