ரூ.23.72 கோடிக்கு விலைபோன விராத் கோலியின் ஓவியம்

mgid start

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் ஐபிஎல் பயணத்தை சித்தரிக்கும் வகையிலான ஓவியம் ஒன்று 2.9 மில்லியன் பவுண்டுகளுக்கு (ரூ.23,72,49,366.39) விலை போனது தெரியவந்துள்ளது. 

விராத் கோலியின் தொண்டு நிறுவனத்துக்காக நடந்த நிகழ்ச்சியில் அந்த ஓவியத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து தொழிலதிபர் பூனம் குப்தா வாங்கினார். விராத் கோலியின் 10 ஆண்டுகள் ஐபிஎல் பயணம் சாஷா ஜெஃப்ரி எனும் முன்னனி கலைஞரின் கைவண்ணத்தில் ஓவியமாக மாறியுள்ளது. இந்த ஓவியத்தை பெரும்விலை கொடுத்து வாங்கிய பூனம் பாண்டே கூறுகையில், 

விராத் கோலியின் பயணம் பல்வேறு இளம் இந்திய வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. அவரது தொண்டு நிறுவனப் பணிகளில் எனது பங்களிப்பும் இருக்கும் வகையிலேயே இந்த ஓவியத்தினை வாங்கினேன் என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது விஜய் மல்லையா பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.