300 ரன்கள் அடித்ததில்: இந்திய அணி புதிய உலக சாதனை!

mgid start

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.
இதன்பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 300 ரன்களுக்கு அதிகமாக ரன்கள் குவித்ததன் மூலம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
இதுவரை ஆஸ்திரேலிய அணி 95 முறை ஒருநாள் போட்டியில் 300 ரன்களுக்கு அதிகமாக எடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 96-வது முறையாக 300 ரன்களுக்கு அதிகமாகக் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இத்தனைக்கும் டெஸ்ட் அணிகளில் மற்ற அணிகளை விடவும் 300 ரன்களைத் தொட இந்திய அணிக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அப்படியிருந்தும் தற்போது அதிகமுறை 300 ரன்களைக் கடந்த அணிகளில் முதல் இடத்தில் உள்ளது இந்தியா.

*அணிகள் முதல்முறையாக 300 ரன்களை எட்டிய வருடம்*
1975: இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்
1978: மேற்கிந்தியத் தீவுகள்
1992: ஜிம்பாப்வே, இலங்கை
1994: தென் ஆப்பிரிக்கா
1996: இந்தியா

*அதிகமுறை 300 ரன்களைக் கடந்த அணிகள்*
96 இந்தியா
95 ஆஸ்திரேலியா
77 தென் ஆப்பிரிக்கா
69 பாகிஸ்தான்
63 இலங்கை
57 இங்கிலாந்து
51 நியூஸிலாந்து
37 மேற்கிந்தியத் தீவுகள்
23 ஜிம்பாப்வே
11 வங்கதேசம்