இந்தியா-பாக். பைனலில் வெறும் 30 வினாடிக்கு டிவி விளம்பர கட்டணம் எவ்வளவு தெரியுமா?

mgid start
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி பைனலின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் 30 வினாடி விளம்பரம் செய்ய ரூ.1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதின. இதன்பிறகு, 10 வருடங்கள் கழித்து ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் இவ்விரு அணிகளும் நாளை பலப் பரிட்சை நடத்த உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோத உள்ளதால் நாடு முழுக்க ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலை செய்கிறது.

இந்த போட்டியை பல கோடி ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள் என்பதால் விளம்பர கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாம். 30 வினாடிகளுக்கு ரூ.1 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியா-பாக். போட்டியையொட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில், டிவி விளம்பர கட்டணம் 10 மடங்கு உயர்ந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தெரிிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதுவது ஐசிசி, பிசிசிஐ, விளம்பரதாரர்கள், டிவி சேனல்கள் மட்டுமின்றி சூதாட்ட தரகர்களுக்கும் கொண்டாட்டமான விஷயம். அவர்களும் ரூ.2000 கோடி மதிப்பில் சூதாட்டத்தில் குதித்துள்ளார்கள்.