ஸ்மார்ட் ரேசன் கார்டு சேதமா? ரூ.30 செலுத்தி புதுகார்டு பெறலாம்! எங்கே? எப்படி தெரியுமா?

mgid start
தமிழகத்தில் ரேசன்கார்டுகளுக்கு பதிலாக மின்னணு ரேசன் கார்டுகள் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய மின்னணு ரேசன் கார்டு (ஸ்மார்ட் ரேசன் கார்டு) தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலோ இ-சேவை மையங்களில் ரூ.30 செலுத்தி புது மின்னணு ரேசன் கார்டு பெற்று கொள்ளலாம்.
இதற்கு பழைய குடும்ப அட்டையில் பதிவு செய்து கைப்பேசி எண்ணை தெரிவிக்க வேண்டும். அந்த எண்ணுக்கு பாஸ்வேர்டு ஒன்று அனுப்பப்படும். அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி புதிய மின்னணு ரேசன் கார்டுகள் வழங்கப்படும்.
அந்த விண்ணப்பங்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளித்த பிறகு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதன் பின்னர் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகி ரூ.30 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.