50 வயதில் 18 வயது தேவதையாய் ஜொலிக்கும் சீன அழகி.. பலரும் அறியா வியக்க வைக்கும் ரகசியம்!!

mgid start
சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு 50 வயதாகிவிட்ட போதிலும் 18 வயது அழகு பதுமை போன்று ஜொலிக்கிறார். Yelin என்பவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர், இவர் 50 வயதை நெருங்கிவிட்டாலும் இவரை பார்ப்பவர்கள் 18 வயது பதுமை போன்று இருப்பதாக கூறுகிறார்கள்,
அந்த அளவுக்கு தனது உடலை சிக்கென்று கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இதுகுறித்து Yelin கூறியதாவது, நான் எனது மகனுடன் நடந்து சென்றால், பார்ப்பவர்கள் அனைவரும் என்னை அவனது காதலியா எனக்கேட்கின்றனர்.
Weibo என்ற இணையதளத்தில் எனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்த ஓரிரு நாட்களில் 75000 பேர் என்னை பின்தொடர்ந்தார்கள், எனது அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
விளம்பரங்களில் நடிக்க வைப்பதற்கு பல்வேறு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றார்கள்.

நான் எனது முகத்திற்கு எவ்வித க்ரீம்களையும் அப்ளை செய்வது கிடையாது, கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான முயற்சி செய்து வருகிறேன். நீச்சல் அடிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று, எனவே கடலில் நீச்சலடிப்பதை விட குளங்கள் மற்றும் ஏரிகளில் ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது நீச்சல் பயிற்சி மேற்கொள்வேன்.
இவரின் பிரகாசமான தோல் மற்றும் கட்டமைப்பான உடல் அனைவரையும் கவர்ந்துள்ளது, மேலும் 50 வயதாகிவிட்டாலும் முகத்தில் எவ்வித சுருக்கமும் இன்றி 18 வயது பதுமையாக ஜொலிக்கிறார்.