பாலியல் தொந்தரவால் ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் தலைமையாசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை

mgid start
புதுக்கோட்டை ராயப்பட்டியில் பாலியல் தொந்தரவால் ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் தலைமையாசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ராயப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் புவனேஸ்வரி என்பவர் உதவி தலைமையாசிரியராக பணியாற்றிவந்தார். அதே பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிய மதிவாணன் என்பவர், புவேனேஸ்வரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

புவனேஸ்வரியின் கணவர் மற்றும் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தும் மதிவாணனின் பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்ததால், புவனேஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மதிவாணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது