நாளை முதல் : ரூ.9,000/- முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!

mgid start
நோக்கியா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களான - நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஆகிய கருவிகளை இந்தியாவில் நாளை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது. நோக்கியா பிராண்டட் போன்களை சந்தைப்படுத்துவதற்கான உரிமைகளை சொந்தமாக வைத்திருக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஜூன் மாதம் 13-ஆம் தேதி நோக்கியா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை இந்த மாதம் முன்னதாக விடுத்தது. 

கடந்த வாரமே நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிடும் என்பதை வெளிப்படுத்திய எச்எம்டி க்ளோபல் நிறுவனம் தற்போது அதை உறுதி செய்துள்ளது. ஆக நாளை இந்தியாவில் மாண்டு போன நோக்கியா இராஜாங்கத்திற்கு மீண்டும் பட்டாபிஷேகம் நடக்கவுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் 
பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் மாநாட்டில் (MWC) உலகளவில் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் இந்த அனைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்களும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6 
நோக்கியா 6 ஆனது 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி செல்பீ கேமரா, 16எம்பி ரியர் கேமரா, கைரேகை சென்சார், 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.