பிக் பாஸில் அது என்ன கூகுள் சர்ச் வோட்டிங் சிஸ்டம்..? #BiggBossVote

mgid start
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ஆச்சர்யங்கள் இருந்தாலும், நெட்டிசன்களை தலை திருப்ப வைத்திருக்கிறது கூகுள் மூலம் வாக்களிக்கும் சிஸ்டம். அதுவும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாலும் “Bigg boss vote" என்றே கூகுள் சர்ச் செய்ய சொல்கிறது விஜய் டிவி. இது என்ன கலாசாரம்? எப்படி இயங்குகிறது? பார்த்துவிடுவோம்.

எப்படி வாக்களிக்க வேண்டும்:
1) நிகழ்ச்சியில் குறிப்பிடும் காலக்கெடுக்குள், கூகுள் பக்கத்தில் “BIGG BOSS VOTE" எனத் தேட வேண்டும்
2) தேடுதல் முடிவுகளில் முதலில், யாரெல்லாம் நாமினேஷனில் இருக்கிறார்களோ, அவர்களின் படங்கள் வரும்.
3) யார் இந்த போட்டியில் தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களே அவர்களுக்கு அவர்களின் படத்தை கிளிக் செய்து வாக்களிக்க வேண்டும்
4) ஒரு நாளைக்கு 50 முறை நம்மால் வாக்களிக்க முடியும். அதாவது, ஒரு ஜிமெயில் ஐடி மூலம் 50 வாக்குகள் செலுத்தலாம்.அந்த ஐம்பதையும் ஒரே க்ளிக்கில் போடலாம். அல்லது, நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கு பிரித்தும் அளிக்கலாம்.
இந்த கூகுள் வோட்டிங் சிஸ்டம் முதன்முதலில் தி எக்ஸ் ஃபேக்டர் இந்தோனேஷியா என்ற நிகழ்ச்சியில் 2015ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதன் பின் உலகமெங்கும் நடக்கும் டேலண்ட் ஷோக்கள் மற்றும் ரியாலிட்டு ஷோக்களில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டது. மக்களும் மற்ற எந்த முறையையும் விட இது எளிமையாக இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு மேகி நிறுவனம் தனது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்தபோது இந்த கூகுள் சர்ச் வோட்டிங் முறையை பயன்படுத்தியது. புதிய 8 சுவைகளை பட்டியலிட்டு, அதற்கு தனது வாடிக்கையாளர்களை வாக்களிக்க சொன்னது மேகி. அந்த எட்டில் நான்கு சுவைகளைத்தான் மேகி வெளியிட திட்டமிட்டிருந்தது. சரியான சுவைகளுக்கு வாக்களித்தவர்களுக்கு பரிசுகளை மேகி அறிவித்தது. 
தொலைக்காட்சி ஊடகத்துக்கும் டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைப்பதற்காக பல முயற்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் எடுத்து வருகிறார்கள். தொலைக்காட்சியில் இண்ட்ராக்டிவ் வசதிகள் குறைவு அல்லது அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததில்லை என்பதால் கூகுளின் இந்த வசதிகளுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.