'பிக் பாஸ்' - கமல்ஹாசனுக்கு சம்பளம் எவ்வளவு ?

mgid start
விஜய் டிவியைத் திறந்தாலே கமல்ஹாசன் வந்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த புரோமாவிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதைத்தான் அப்ப 'சிம்பாலிக்காக' சொல்கிறார் போலிருக்கிறது.

இந்த மாதம் 25ம் தேதியிலிருந்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. எவ்வளவு வாரங்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசனுக்கு கணிசமான ஒரு பெரிய தொகை வருமானமாக கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதே நிகழ்ச்சியைத் தெலுங்கில் பிரபல நடிகரான ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ளார். அந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு ஒரு எபிசோடுக்கு சுமார் 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படத்தில் சுமார் 100 நாட்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை இந்த நிகழ்ச்சியில் சில நாட்களில் நடித்து, ஒரு படத்திற்கான சம்பளத்தை விடவும் அதிகமாக வாங்கிவிடுவார் போலிருக்கிறது என்கிறார்கள்.

ஜுனியர் என்டிஆருக்கே அவ்வளவு சம்பளம் என்றால் இங்கு தமிழில் கமல்ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். கமல்ஹாசனுக்கு ஒரு எபிசோடுக்கு குறைந்தது 75 லட்சம் ரூபாயாவது சம்பளமாக வழங்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எப்படியோ இனி, தமிழ் டிவிக்களின் நிகழ்ச்சிகளிலும் கோடிகள் என்பது சர்வசாதாரணமாகிவிடும் போலிருக்கிறது.