ஜெயலலிதா இல்லாததை பயன்படுத்தி, தமிழர்களை போதையில் ஆழ்த்த திட்டம்! (எந்த போதை பொருள் எங்கு விற்கபடுகிறது தகவல் உள்ளே)

mgid start
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில், சட்டவிரோத போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருள் நுகர்வு அதிகரித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலையான அரசு இல்லாததும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
ஜெயலலிதா இல்லாததை பயன்படுத்தி, தமிழர்களை போதையில் ஆழ்த்த திட்டம்!
தமிழகத்தின் 1067 கிலோமீட்டர் நீள கடற்கரை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான தடையற்ற வான் வழித் தொடர்பு, முக்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி, தமிழகத்தை    போதை பொருட்களின் கேந்திரமாக மாற்ற, சட்ட விரோத கும்பல்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.
இயற்கையில் இருந்து கிடைக்கும் போதைபொருட்களான ஹெராயின், கோகைன், கஞ்சா மற்றும் செயற்கையாக போதை மருந்துகள் தயாரிக்கப் பயன்படும்,  lysergic acid diethylamide மற்றும்  ketamine,  pseudoephedrine போன்ற மருந்துகளை  கடத்தல் கும்பல்கள் சட்டவிரோத வர்த்தகம் செய்து வருகின்றன.
அமலாக்கத்துறை அளிக்கும் தகவலின்படி, கடந்த ஆறு மாதங்களில் மட்டும்,  போதை மருந்து தயாரிக்கப்பயன்படும்,  86 கிலோ  ephedrine பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 3 மடங்கு அதிகம் ஆகும்.
இதே போல் இந்த ஆண்டில் மட்டும் 115 கிலோ ஹெராயின் தமிழகம் முழுவதிலுமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத  மிக அதிக அளவு ஆகும்.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, amphetamine என்ற போதை மருந்து 25 சதவீதம் அதிகமாக இந்த ஆண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 3 வாரத்திற்கு முன்பு தூத்துக்குடியில் போலீசார் 5 கிலோ ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றினர். கடந்த ஏப்ரல் மாதம் ராமேஸ்வரம் மீனவர்கள் சிலரை கைது செய்த இலங்கை கடற்படை 13 கிலோ போதை மருந்துகளை அவர்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டியது.
இந்த போதைப் பொருட்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் விளைந்தவை. மருத்துவ காரணங்களுக்காக இவை பயிரிடப்படுகின்றன.
இலங்கையில் போதை மருந்துகள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறி வருகின்றனர். தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தமிழக கடற்கரைகளுக்கு இந்த போதை பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதே போல் சென்னை செங்குன்றத்தில் ஒரு சிறிய போதை மருந்து தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கிருந்து, 90 கிலோ, ஹெராயின், மற்றும் போதை பொருட்கள் செய்ய பயன்படும்,  56 கிலோ pseudoephedrine , 11 கிலோ methamphetamine ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
தமிழகத்தை பொருத்தவரை, திருப்பூர், கோயம்புத்தூரில் போதை மருந்து விற்பனை அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்வோர், தொழிலாளர்களை குறிவைத்து போதைபொருள் கும்பல் செயல்பட்டு வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.