சர்பிரைஸ் கொடுப்பதாக கூறி மனைவியை கொன்ற கணவன்!

mgid start
மனைவிக்கு சர்பிரைஸ் கொடுப்பதாகக் கூறி அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். 
டெல்லியில் உள்ள குர்கானில் வசித்து வருபவர் மனோஜ் (24). இவருக்கும், கோமல் (22) என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 6 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை. கோமல் ரகுபிர் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கோமல் மீது அவருக்கு சந்தேகம். இதையடுத்து, தன்னுடன் வரும்படி அழைத்த மனோஜின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். ஆத்திரமடைந்த மனோஜ் தனது மனைவியை கொல்ல திட்டமிட்டார். 
இதைத் தொடர்ந்து, தனது திட்டத்தின்படி, சர்பிரைஸ் கொடுப்பதாகக் கூறி போன்ட்டா பார்க்கிற்கு கோமலை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற பின், கோமலின் கண்களை மூடும்படி கூறியுள்ளார். பின்னர், அவர் வாங்கி வந்த  கயிற்றால் மனைவியின் கழுத்தை நெறித்துக்கொன்றார். பின் அங்கேயே தள்ளிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, ஊரை விட்டு தப்பி செல்ல முயன்றார் மனோஜ். 
இதையறிந்த மனோஜின் நண்பர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அவரை கைது செய்த போலீசார், அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.