'மல்லையா திருடன்'- லண்டனில் கோஷமிட்ட ரசிகர்கள்

mgid start
லண்டன்: லண்டனில் இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியை பார்க்க வந்த மல்லையாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் பல்வேறு கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லண்டனில் சொகுசு வாழ்க்கை நடத்தி வரும் மல்லையா, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கடந்த வாரம் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை நேரில் பார்த்து ரசித்தார். இதனை டுவிட்டரிலும் வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று (ஜூன்11) லண்டன் ஓவல் மைதானத்தில் இ்ந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் போட்டியை நேரில் பார்க்க மல்லையா வந்தார். மைதான வாசலில் குழுமியிருந்த இந்திய அணி ரசிகர்கள், மல்லையாவை எதிர்த்து கோஷம் போட்டனர். 'மல்லையா திருடர்' என கோஷம் போட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.