ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் தீ விபத்து! அதிகம் பகிருங்கள்..

mgid start
திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் திடீரென மின்கம்பம் எரிந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாய் பதிப்பால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கதிராமங்கலம் நருவெளி ஆதிதிராவிடத் தெருவில் ஆற்றுபகுதியின் கரையில் அமைந்திருந்த மின்கம்பத்தில் திடீரென தீப்பிடித்து புகை வருவதை கண்டு, அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். கதிராமங்கலத்தில் செயல்பட்டுவரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாய்கள் இந்த மின்கம்பத்தின் கீழ்பகுதியில் செல்வதால் அக்குழாயின் மூலம் தீப்பிடித்தாதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

மேலும் மின்கம்பத்தின் உள்பகுதியில் இருந்த இரும்புகள் தீயில் உருகி வெளியே வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாய் பதிப்பால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள்  பெரும் அச்சத்திலேயே உள்ளனர்.