கடும் எதிர்ப்புக்கு இடையே “நாய் இறைச்சி” திருவிழா தொடங்கியது!

mgid start
தடை வதந்திகளுக்கு இடையே புகழ்பெற்ற நாய் இறைச்சி திருவிழா சீனாவில் தொடங்கியது.

நாய் இறைச்சி விழாவிற்காக ஆயிரக்கணக்கான நாய்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவதாக செயற்பாட்டாளர்கள் குற்றசாட்டும் நிலையில், ருசியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நாய்கள் அடித்து, உயிருடன் சூப்பாக கொதிக்கவிடப்படுவதாக கூறப்படுகிறது.

பிரபலமான நாய் இறைச்சி விழா ஆண்டு தோறும் நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு முதல் நாய் இறைச்சிக்கு இந்தாண்டு முதல் சீனாவில் தடை விதிக்கப்படலாம் என்ற வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு இடையிலும் நாய் இறைச்சி திருவிழா வழக்கமான உற்சாகத்தோடு தொடங்கியது.

நாய் இறைச்சி சூப், ஃபிரை உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் விழாவில் பரிமாறப்படுகின்றன. இதை உண்டு ரசிப்பதற்காக ஏராளமானோர் சீனாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் விழா நடைபெறும் இடத்திற்கு குவிந்துள்ளனர்.
 
சீனாவில் நாய் இறைச்சி உண்பதற்கு சட்டப்பூர்வமான தடை ஏதும் இல்லாத போதிலும், பல்வேறு விலங்கு நல அமைப்புகள் நாய் இறைச்சி உண்பதற்கு தடைக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றன. 1 கோடி முதல் 2 கோடி வரையிலான நாய்கள் ஆண்டு தோறும் சீனாவில் இறைச்சிக்காக கொல்லப்படுவதாக அந்த அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.