விவேகம் சாதனையை முறியடித்தது மெர்சல்!

mgid start
அஜீத்குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடிக்கும் படம், ‘விவேகம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் டிவிட்டரில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதை சிறுத்தை சிவா வெளியிட்டிருந்தார். இப்போது வரை 31 ஆயிரம் ரீடிவிட் ஆகியிருக்கிறது, அந்த பர்ஸ்ட் லுக். இது சாதனையாக இருந்தது. ஆனால், விஜய் நடித்துள்ள ’மெர்சல்’ படத்தில் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 39 ஆயிரம் ரீடிவிட் செய்யப்பட்டு சாதனைபடைத்துள்ளது. 
மெர்சல் படத்தில் கிராமத்து தலைவர், டாக்டர், மற்றும் மேஜிக் மேன் என்ற மூன்று வேடத்தில் நடிக்கிறார் விஜய். அட்லி இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ஆகஸ்ட் மாதம் இதன் பாடல்கள் வெளியாக இருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.