பெட்ரூம் காட்சிகளை லைவ் செய்த கணவன் மீது மனைவி புகார்

mgid start
படுக்கையறை காட்சிகளை மனைவிக்குத் தெரியாமல் ஸ்கைப் மூலம் லைவ் செய்த கணவன் மீது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மேடாக் மாவட்டத்தை சேர்ந்தார் அகுலா சைதன்யா. மாக்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவாக பணியாற்றி வந்தார். ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கம் கொண்ட அகுலாவுக்கு கடந்த ஒன்றவரை வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஆபாச இணையதளம் மூலம் ஸ்ரீமன் என்பவர் நண்பரானார். இருவரும் போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டனர். 
பின்னர், தனது மனைவி குளிப்பது, உடை மாற்றுவது, ஆடை விலகிய நிலையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளார். அவரும் இதே போல அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. பின்னர் படுக்கையறையில் மனைவியுடன் இருக்கும் காட்சிகளை, ஸ்கைப் மூலம் ஸ்ரீமனுக்கு லைவ் செய்திருக்கிறார் அகுலா. 
சமீபகாலமாக அகுலாவின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரின் செல்போனை பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்தார். அதில் இவரது ஆபாசப் புகைப்படங்கள் அதன் மூலம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. ஷாக் ஆன அவர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அவர்கள் நடத்திய விசாரணையில்தான், ஸ்கைப் லைவ் விவகாரங்கள் வெளியே வந்திருக்கின்றன. 
இதையடுத்து போலீசார் அகுலாவை கைதுசெய்துள்ளனர்.