சசிகலாவுடன் சேர்ந்து தீபக் ஜெயலலிதாவை கொன்றார் : தீபா பகீர் பேட்டி

mgid start

சென்னை : சசியுடன் சேர்ந்து தனது சகோதரர் தீபக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக தீபா கூறினார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று திடீரென போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு தீபா தனது கணவர் மாதவனுடன் வந்து பத்திரிகையாளர்களுக்கு கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.அதில், தீபக் அழைத்ததால் தான் போயல் கார்டனுக்கு வந்தேன். அங்கு வந்து ஜெ.,வின் படத்திற்கு பூ மட்டும் வைத்து விட்டு போ என தீபக் சொன்னார். என்னை உள்ளே விட மாட்டார்கள் என நான் கூறியதற்கு நான் இருக்கிறேன் வா என்றார். நான் வந்ததும் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளரை தாக்கினர். 

அதனால் தான் வீட்டில் இருந்து வெளியே வந்தேன். அங்கு 2 குண்டர்கள் மட்டும் தான் உள்ளனர். அவர்கள் என்னை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. குண்டர்கள் என்னையும் என் பாதுகாவலர்களையும் அடித்து வெளியே தள்ளிவிட்டனர். எங்களை தாக்கியவர்களை அடையாளம் காட்ட தயார்.சசிகலாவுடன் சேர்ந்து தீபக் தான் திட்டமிட்டு என்னை ஏமாற்றி வரவழைத்துள்ளார். சசிகலாவுடன் இணைந்து தீபக், ஜெயலலிதாவை கொன்றார். அம்மா போன்று இருந்த அத்தையை கொன்றது அவர் தான். போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமை கேட்டு நாளை டில்லி கோர்ட் செல்ல உள்ளேன்.

தீபக் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கும், தனது கணவர் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இதனால், போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தாக்கப்பட்ட பத்திரிகையாளருக்கும், சிகிச்சை அளிக்க வேண்டும். பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். பிரதமரை சந்தித்து விரிவாக பேச உள்ளேன். எனக்கும் எனது கணவர் உயிருக்கும் ஆபத்தும் உள்ளது. போலீஸ் பாதுகாப்பு தேவை. போயஸ் கார்டன் வீட்டிற்குள் ஏதோ தவறு நடக்கிறது. அதனால் தான் உள்ளே விட மறுக்கிறார்கள். இவ்வாறு தீபா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.