தனி ரயில் வைத்து இருந்த தமிழனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

mgid start
எங்க வீட்ல கார் இருக்கு என்று இன்று பல பேர் பீற்றி கொள்ளலாம். ஆனால் தனியாக ரயில் இருக்கு என யாரவது சொன்னால் எப்படி இருக்கும்.
ஆம் இன்று நாம் பார்க்க போகும் நம்பெருமாள் செட்டியார் தனக்கென சொந்தமாக ரயில் வைத்திருந்த ஒரே தமிழன். வெளிநாட்டு காரை வாங்கிய முதல் இந்தியன்.
யார் இந்த நம்பெருமாள் செட்டியார்?
ஆங்கிலேயர்கள் காலத்தில் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு "பிலடிங் காண்டெக்டர்." தான் நம்பெருமாள் செட்டியார் .
 இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றவர் . முன்னாள் இம்பீரியல் வங்கி ( தற்போது SBI) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.
இன்று சென்னையில் உங்களுக்கு தெரிந்த பல கட்டிடங்களை கட்டியவர் இவர்தான்.
பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்ற கட்டிடங்கள் அவர் கட்டிவை தான்.
இவர் வாழ்ந்த வீடு சேத்து பட்டில் 30 அறை கொண்டதாக இன்று கண்காட்சிக்கு வைக்க பட்டுள்ளது.
சேட்பட் பெயர் காரணம் தெரியுமா..
அந்த காலத்தில்
எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு நம்பெருமாள் செட்டிக்கு சொந்தமாக இருந்தது. அதனால் அது செட்டியார் பேட்டை என அழைக்கப்பட்டது. நாளடைவில் செட்டிபேட்டை என மருவி இன்று செட்பட் என மாறிவிட்டது.
கணித மேதை ராமானுஜம் தனது கடைசி காலத்தில் காச நோயால் அவதி பட்டு இறந்தார் என்று நமக்கு தெரியும் அல்லவா.. அவர் கடல் கடந்து சென்றதால் அவர் குடும்பத்தாலேயே கைவிட பட்டதால் கடைசியாக இறந்தது நம்பெருமாள் செட்டியார் அவர்களிடம் தான். அவர் தான் அவருக்கு ஈமை சடங்குகளை செய்தவர். அவரது இறப்பு சான்றிதழ் இன்னமும் அவர் வீட்டில் தான் உள்ளது.
தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வடசென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில் தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடை அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன. சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.
இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார். தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார். மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அடிமையாக இருந்த காலத்திலேயே இப்படி அரசனை போல் வாழ்ந்த தமிழன் தான் நம்பெருமாள் செட்டியார்