மனைவியின் வாட்ஸ் அப் சாட் பார்க்க முயன்ற கணவருக்கு அரிவாள் வெட்டு: மனைவி வெறிச்செயல்

mgid start
லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் தன்னுடைய மனைவி யாருக்கு வாட்ஸ் அப் மூலம் பேசி கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள அவரது மொபைல் ஃபோனை பிடிங்கியதால் ஆத்திரமடைந்த மனைவி அரிவாளால் கணவரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நேத்ரபால் சிங்(21) நீது சிங்(19) ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து தனித்தனியே வாழ தொடங்கினர்.
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நேத்ரபால் சிங் வீட்டில் நடபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நீது சிங் வந்துள்ளார். அப்போது நீது சிங் வாட்ஸ் அப் மூலம் யாருடையோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் நீ யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறாய், உனது ஃபோனை கொடு என கேட்டுள்ளார். இதற்கு நீது சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அவரது மனைவியிடம் இருந்து வலுக்கட்டாயமாக போனை பிடுங்கியுள்ளார். இதில் கோபமடைந்த மனைவி, அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது கணவரை வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.