ஐ.சி.சியின் புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகம்

mgid start

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐ.சி.சி. சர்ச்சைக்குரிய முறையில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்து வந்ததும், தடிமனான பேட் உபயோகிப்பதால் பந்து சேதமடைகிறது எனவும் வெகு நாட்களாகவே பரவலாக பேசப்பட்டும் புகார் செய்யப்பட்டும் இருந்தன. அதற்கு செவி கொடுக்கும் வகையில் ஐ.சி.சி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரைத்த பல கோரிக்கைகளில் மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளது ஐ.சி.சி.

பேட்டின் அளவில் விதிமுறை

பந்தின் தன்மைக்கு ஏற்ற பேட் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பேட்டின் தடிம அளவு 67 mm இருக்க வேண்டும் எனவும், பேட்டின் எட்ஜில் 40 mm வரை இருக்கலாம் எனவும் புதிய வரைவு வகுக்கப்பட்டுள்ளது. ஆஸ்டிரேலியாவின் வார்னர் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் மிகவும் தடிமனான பேட்டை உபயோகிப்பது பல சமயங்களில் பந்தின் வடிவத்தை மாற்றும் அளவுக்கு விளைவை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது. 

ரெட் கார்டு முறையில் வீரரை வெளியே அனுப்ப அம்பயருக்கு உரிமை

ஒரு தனிப்பட்ட வீரரின் நடவடிக்கையை கண்கானித்து அது விதிமுறைகளுக்கு மீறி இருந்தாலோ அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவரை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றும் உரிமை அம்பயருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஃபுட்பால் விளையாட்டில் இருக்கும் ரெட் கார்டு விதிமுறை போன்றதாகும்.

ரன் அவுட் விதிகளில் புதிய மாற்றம்

ரன் எடுக்க முயலும்போது க்ரீஸை தொட்டுவிட பல முறை வீரர்கள் தாவி விழுவதை பார்த்திருப்போம். அவ்வாறு தாவும்போது பேட் தரையில் பட்டு பவுன்ஸ் (Bounce) ஆக நேரும். பேட் க்ரீஸ் கோட்டுக்கு உள்ளே வந்த நிலையிலும் தரையில் படாமல் இருந்தால் அவர் அவுட் என்றே கருதப்படுவர். இந்த விதிமுறை பல்வேறு ஆட்டங்களில் வெற்றி தோல்வியையே தீர்மானிக்கும் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியிலும் ரோஹித் ஷர்மா அவரது விக்கெட்டை இவ்வாறே பறிகொடுத்தார். இந்த விதிமுறையை பல வருட ஆலோசனைக்கு பிறகு இப்போது மாற்றியுள்ளது ஐ.சி.சி. பேட்ஸ்மேன் கீர்ஸுக்குள் தனது பேட்டை கொண்டு வந்தாலே அது ரன் கணக்கில் சேரும் என்று புதிய மாற்றத்தை கொண்டுவந்தது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.

இந்த விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.