இந்தியா - இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை!

mgid start
➤ சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா ?
➤ வாழ்வா, சாவா ஆட்டத்தில் இலங்கை அணி..!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாட உள்ளது. 

இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில், இந்தியா வெல்லும் பட்சத்தில் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறும். தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால் இந்திய அணி உற்சாகத்துடன் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளதால், இலங்கை அணிக்கு இது வாழ்வா? சாவா? என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழலில் அந்த அணி களமிறங்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், இன்றைய போட்டியிலும் மழையின் குறுக்கீடு அதிகளவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.