விஜய் சேதுபதியின் “விக்ரம் வேதா” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

mgid start
நடிகர்கள் விஜய் சேதுபத மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள “விக்ரம் வேதா” திரைப்படத்தின் இரண்டரை நிமிட ட்ரெய்லர் இனையத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இன்று (22-06-2017) வெளியாகியுள்ளது. 

இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரி ஆகியோர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு பிறகு மாதவன் நடிக்கும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி ‘டான்’ கேரக்டரில் நடித்துள்ளார். 

நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் கதிர், ஷர்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார்.   க்ரைம் த்ரில்லராக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.