மாற்று சாதி இளைஞரை காதலித்த பெண் விஷம் கொடுத்துக் கொலை!

mgid start

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்று சாதி இளைஞரை காதலித்ததற்காக, இளம்பெண் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கால்வாய் பகுதியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவருடைய மகள் வெண்ணிலா. மாற்று சாதி இளைஞரை காதலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்தாண்டு கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக கால்வாய் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், வெண்ணிலாவை, அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. சுப நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வெண்ணிலாவை, காரில் அழைத்துச் சென்று வாயில் விஷம் ஊற்றி உடலை கல்லில் கட்டி கிணற்றில் போட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கிணற்றிலிருந்து உடலை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக சேகரிக்கப்பட்ட எலும்பு துண்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கொலை தொடர்பாக, பெண்ணின் தந்தை மற்றும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.