நடிகர் ரஜினிகாந் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் மேலும் படிப்பறிவு அற்றவர் எனவே அவர் அரசியலுக்கு வரக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து!

mgid start
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்தால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. 

சுப்பிரமணியன் சுவாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ராஜிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்று கூறினார். மேலும் அவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் கூறினார். 

மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமால் இருப்பதுவே அவருக்கு நல்லது என்று கூறினார். 

மேலும் ரஜினிகாந்த் குறித்து இன்று கூறிய கருத்தில் டிகர் ரஜினிகாந்த் படிப்பறிவு அற்றவர் என்றும் அரசியலுக்கு வர அவருக்கு தகுதி கிடையாது எனவும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த சர்ச்சைக் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு ரஜினிகாந்த் எந்த பதில் கருத்தும் கூறவில்லை மேலும் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் பொழுதெல்லாம் அரசியலுக்கு வந்தால் தெரிவிக்கின்றேன் என்றே பதில் கூறிவருகிறார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து ரஜினி ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.