மரணத்தை எதிர்நோக்கி குழந்தை சவக்குழியில் விளையாடும் தந்தை

mgid start
சீனாவில் இரண்டு வயது குழந்தை அரிய வகை நோய் பாதிப்பினால், மரணத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கும் வேளையில், அவரது தந்தை சவக்குழியில் அக்குழந்தையுடன் விளையாடிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜாங் ஷின் லீ என்ற இரண்டு வயது குழந்தைக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலசீமியா என்ற நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சிகிச்சைக்கு மட்டும் 11,000 பவுண்டிற்கு அதிகமாக செலவு செய்துள்ளனர்.

இது போததால் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் சிகிச்சைக்காக பணம் வாங்கியுள்ளனர். தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிர் வாழமுடியும். இல்லை எனில் குழந்தை இறக்க நேரிடும்.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்வதற்கு பணம் வேண்டும். தற்போது அவர்களிடம் பணம் இல்லை. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் அவர்களால் கேட்க முடியவில்லை.

ஏனென்றால் அவள் தற்போது மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். அவளை இங்கு தான் புதைக்க உள்ளோம்.

அதனால் அவளை தினந்தோறும் இங்கு அழைத்து வந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். இதை அக்குழந்தையின் தாய் அருகில் இருந்துகொண்டு பேசமுடியாத நிலைமையில் பார்த்துக் கொண்டிருந்தார்.