உத்திர பிரதேசத்தில் போலீசாரிடம் லஞ்சம் கொடுக்க முன்வந்த ஐந்து வயது சிறுமி

mgid start
தன் தாயின் மரணத்தின் மர்மத்தை கண்டுபிடிக்க ஐந்து வயது சிறுமி காவல்துறை ஆய்வாளரிடம் சென்று லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார்.
உத்தர் பிரதேசம்,

உத்தர் பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் தன் தாத்தாவுடன் வசித்து வருகிறார் மாநவீ. இவர் தாயின் மரணத்திற்க்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

மாநவீயின் தாய் சீமாவிடம் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் சீமா அவரது கணவரை நான்கு வருடங்களுக்கு முன்பே பிரிந்துவிட்டார். 

இந்நிலையில் கடும் அச்சுறுத்தலும் துன்புறுத்தலும் செய்ததாக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சீமா. ஆனால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்துள்ளார்.

பின்னர் சீமாவின் கனவர் கைது செய்யப்பட்டார். ஆனால் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுதர லஞ்சம் கேட்பதாக அறிந்த சிறுமி மாநவீ இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார். 

அழுதுகொண்டு வந்த சிறுமியிடம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்தார்.