முதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி

mgid start
சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்ற காரில் தேசியக் கொடி தலைகீழாகப் பறந்தது. 
முதலமைச்சரின் காரிலேயே தேசியக்கொடி தலைகீழாகப் பறந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவினை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார். துணை நிலை ஆளுநரின் அதிகார வரம்புகளை நெறிமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பின்னர் நாராயணசாமி புறப்பட்ட காரில் தேசியக்கொடியானது தலைகீழாகப் பறந்தது.