குப்பை வண்டி ஓட்டிக் குப்பை சேகரித்த நகராட்சி கமிஷனர்! மிரண்டு போன ஊழியர்கள்!!

mgid start

தமிழகத்தில் சுகாதாரம் என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு நகரில் அனைத்துத் தெருக்களும் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவது இல்லை.
அப்படியே குப்பை தொட்டியில் போட்டாலும் அந்தத் தொட்டியை தினமும் சுத்தம் செய்ய ஊழியர்கள் வருவது இல்லை. ஒவ்வொருவரும் நினைத்தால் குப்பை இல்லாத மாநிலமாக மாற்றலாம்.
குப்பை சேரவிடாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அதை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நடைமுறைப்படுத்துவது இல்லை.
பொதுமக்களுக்கு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டும் என புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் முடிவு செய்தார்.
தானே குப்பை வண்டியை எடுத்துக் கொண்டு தெரு, தெருவாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதை பார்த்த சுகாதார துறை அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட துவங்கினர்.
இது போல அணைத்து அதிகாரிகளும் தங்களின் பணியில் உண்மையாக செயல் பட்டால் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாறும் என்பதில் மாற்று கருத்து இல்லை
மேலும் இவரின் சேவை பாராட்டி இந்த செய்தியை நண்பர்களுக்கும் பகிருங்கள்...