சாதாரண உணவகத்தில் ஒபாமா! கனடா பிரதமருடன் ருசிகர சந்திப்பு

mgid start

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒரு சாதாரண ரெஸ்ட்டாரண்ட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படம், தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், ஜஸ்டின் ட்ரூடேவும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒரு சாதாரண ரெஸ்ட்டாரண்ட் அறையில் அமர்ந்திருக்கின்றனர். எதிரெதிர் இருக்கையில் சாதாரணமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஜஸ்டின், 'ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள இளம் தலைவர்களை எப்படி செயல்படவைப்பது என்பதுகுறித்து உரையாடினோம். என் சொந்த ஊருக்கு வந்த ஒபாமாவுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.