இந்த வருட இறுதியில் உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை!

mgid start


இதய மாற்று, சிறுநீகர மாற்று போல உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை இந்த வருட இறுதியில் நடைபெற உள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த வலேரி ஸ்பிரிடிநோவ் (30) தடை செயல் இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலை தவிர உடலின் வேறு எந்த பாகமும் செயல்படாது. இவருக்கு தான் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. மருத்துவர் செர்ஜியோ கனவெரோ தலைமையில் 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளனர்.

ஸ்பிரிடிநோவின் தலையை அறுவை சிகிச்சை மூலம், உடன் தானம் செய்பவரின் உடலுடன் இணைக்க உள்ளனர். அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுவிட்டால் புதிய உடலுடன் சேர்ந்து ஸ்பிரிடிநோவ் தன் தசைகளை இயக்க முடியும். தண்டு வடத்தை வெட்டுவதற்காகவே மருத்துவர் கனவெரோ பிரத்யேகமான கத்தியை தயாரித்துள்ளார். ஸ்பிரிடிநோவ் தலை நீக்கப்பட்டு ரத்தம் வெளியேறாதபடி பாதுகாக்கப்பட்டு பின்னர் புதிய உடலுடன் இணைக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்கு 20 மில்லியன் டாலர் செலவாகும் என்று கூறப்படுகிறது.