இரண்டு அணு உலைகளை மூடக் கோரி ஆயிரக கணக்கானோர் போராட்டம்!

mgid start
பெல்ஜியத்தில் இரண்டு அணு உலைகளை மூடக் கோரி தொண்ணூறு கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரக்கணக்கானோர் மனிதச் சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பெல்ஜியத்தின் திகாங்கே, தோயல் நகரங்களில் உள்ள அணு உலைகளை மூடுமாறு அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இரு நகரங்களுக்கு இடைப்பட்ட தொண்ணூறு கிலோமீட்டர் தொலைவுக்கு ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் மனிதச் சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆற்றங்கரை, சாலையோரம், பாலம் என எல்லா இடத்திலும் இடைவிடாமல் தொடர்ந்து கைகோத்து நின்றதுடன் அணு உலைகளை மூடக் கோரும் பதாகைகளையும் வைத்திருந்தனர்.