இணையதளத்தில் மணல் விற்பனை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்! (எப்படி இணையத்தில் மணல் புக் செய்வது தகவல் உள்ளே)

mgid start
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் எளிதில் கிடைத்திட ஏதுவாக தமிழ்நாடு மணல் இணைய சேவை இணைய தளத்தையும், செல்லிடப் பேசி செயலியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். 

இதன் மூலம் குறைந்த விலையில்  தங்குதடையின்றி மணல் கிடைக்க வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல் பெற்றுக் கொள்வதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுப்பணித்துறை வாயிலாக இன்று முதல் 30 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.