பலாத்காரத்துக்குப் பின் இறந்த குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்த அப்பாவி பெண்!!

mgid start

குருகிராமில் ஆட்டோ ஓட்டுனர் உள்பட மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கயவர்களால் தூக்கி வீசப்பட்ட தனது குழந்தை இறந்துவிட்டது என்று கூடத் தெரியாமல் தோளில் சுமந்துகொண்டு ரயிலில் பயணித்த சம்பவம் அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மே 29ஆம் தேதி இரவு பழைய குருகிராம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் தன்னுடைய 8 மாத பெண் குழந்தையுடன் ஷேர் ஆட்டோவில் ஏறினார். ஏற்கனவே இரண்டு பயணிகள் ஆட்டோவில் இருந்தனர்.

ஆட்டோ மனேசர் அருகே செல்லும்போது, ஆட்டோவை ஓட்டுனர் நிறுத்தினார். மூவரில் ஒருவர் அந்தக் குழந்தையை தூக்கி சாலையின் ஓரத்தில் வீசி எறிந்தார். 

பின்னர் அவர்கள் மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அங்கிருந்து மூவரும் சென்று விட்டனர். பின்னர் அங்கு தனியாக இருந்த அந்தப் பெண் தனது 8 மாத பெண் குழந்தையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, விடிந்த பின்னர் ரயிலில் ஏறி பழைய குருகிராமில் உள்ள தனது கணவரின் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். 

அந்தக் குழந்தை இறந்ததுகூடத் தெரியாமல், தோளில் வைத்துக் கொண்டு அந்தப் பெண் ரயிலில் சென்றுள்ளார். கணவரின் பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் குழந்தையை மருத்துவரிடம் எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு மருத்துவர்களும் குழந்தை இறந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர். தனது பெற்றோருடன் மீண்டும் ரயிலில் இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண் சென்றது அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பின்னர் தனது கணவர் மற்றும் பெற்றோருடன் சென்று எம்.ஜி., சாலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு தலைநகரில் கூட பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிபடுத்துகிறது. தனது தந்தையின் மூலம் இந்த சம்பவத்தை அறிந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உடனடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அப்போது செல்போன் இல்லை என்று கூறப்பட்டாலும், மூன்று ஆண்கள் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, அந்தப் பெண்ணால் என்ன செய்துவிட முடியும் என்பதுதான் அனைவரின் கேள்வியும். தனது மனைவிக்கு நடந்த இந்த சம்பவத்தால் கணவர் மட்டுமின்றி அவரது குடும்பமே வருத்தத்தில் நொறுங்கிப் போய் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.