திருமணமான ஐந்தே நாளில் புதுப்பெண் தற்கொலை!

mgid start

திருத்தணி அருகே திருமணம் ஆகி ஐந்து நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த செருக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கும் வேலூர் மாவட்டம் மேட்டுக்குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள் பத்மாவுக்கு கடந்த 5ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் திருமணம் நடைபெற்றதை அடுத்து, நேற்று முன் தினம் புதுமண தம்பதிகள் இருவர் செருக்கனூரில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றனர்.

காலையில் பத்மாக குளித்துவிட்டு தனி அறையில் உடைமாற்றுவதற்காக சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் மணமகன் வீட்டார் மற்றும் மணமகளின் தாயார் கதவை தட்டியுள்ளனர். அறையின் கதவை உடைத்து சென்று பார்த்த போது பத்மா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அவரை உடனடியாக மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பத்மா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். திருமணம் ஆகி 5 நாட்களே ஆன நிலையில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.