மாட்டு இறைச்சி விவகாரத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்

mgid start
நாடு முழுவதும் மாட்டு இறைச்சி விவகாரத்தில் நேரிட்ட வன்முறைகளில், 86 சதவிகிதம் இஸ்லாமியர்களே கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

இதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகே, 97 சதவிகித தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அண்மையில் நாடு முழுவதும் மாட்டு இறைச்சியை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 8 வருடங்களில் மாட்டு இறைச்சி விற்பனை மற்றும்மாட்டு இறைச்சி சாப்பிட்டது தொடர்பாக நிகழ்ந்த வன்முறைகள் குறித்து, இந்தியா முழுவதும் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 28 நபர்கள் கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதில் 24 இஸ்லாமியர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த தாக்குதல்களில் 124 நபர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே, 97 சதவிகித வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அதேநேரத்தில் மாட்டு இறைச்சி தொடர்பான வதந்திகளை நம்பி மட்டுமே 53 சதவித வன்முறைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.