இங்கிலாந்து நாடாளுமன்ற இணையதளத்தை மர்ம கும்பல் முடக்கம்

mgid start

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணையதளங்களை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்ற இணையதளத்தை மர்ம மனிதர்கள் முடக்கி உள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணைய தளங்களை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இணையதளத்தை மர்ம நபர்களால் முடக்கி வைத்துள்ளனர். பின்னர் நாடாளுமன்ற இணைய தளம் மூலம் அனுப்பப்படும் எந்த தகவல்களும் வெளியிடங்களுக்கு செல்லவில்லை. குறிப்பாக நாடாளுமன்றம் மூலம் எம்.பி.க்களுக்கு அனுப்பக்கூடிய இ-மெயில்களை அவர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அலுவலகல் மற்றும் வீடுகளிலோ பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை உலகில் எங்கேயோ இருக்கும் மர்ம நபர்கள் வைரஸ்கள் போன்றவற்றை அனுப்பி அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.அந்த கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை அழிப்பது மற்றும் செயல்பாடுகளை முடக்குவது இவர்களின் செயல் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் இதை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.