ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஜனாதிபதியை அலட்சியபடுத்திய போலீஸ்..! குவியும் பாராட்டுகள்..! ஆனால் வேலை இருக்குமா?

mgid start
பெங்களூரில் நேற்று மெட்ரோ ரயில் தொடக்க விழா நடந்தது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி allowing the ambulance before president கலந்து கொண்டார். பெங்களூரு வந்த அவரை முதல்வர் சித்தராமையா விமான நிலையம் சென்று வரவேற்று அழைத்து வந்தார்.

அவர்கள் வந்த வாகனம் பெங்களூரின் எம்.ஜி. ரோடு வழியாக தலைமை செயலகமான விதானசவுதா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு இருந்தது. ஜனாதிபதி காரின் முன் பின் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் அதே வழித்தடத்தில் இருக்கும் டிரினிட்டி சர்க்கிள் என்ற சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனமும் வந்து கொண்டிருந்தது. என்ன இன்னும் சில நொடிகளில் ஜனாதிபதி வாகனமும் வந்து விடும் என்ற சூழ்நிலை. அப்போது அங்கு பணியில் இருந்த நிஜலிங்கப்பா போக்குவரத்து காவலர் சற்றும் யோசிக்காமல் ஜனாதிபதியின் காரை விட ஒரு உயிரை காப்பாற்றுவதுதான் முக்கியம் என கருதினார்.

எனவே ஆம்புலன்ஸ் செல்ல வழி விட்டார். ஆம்புலன்ஸ் சென்ற சில மணி துணிகளில் ஜனாதிபதியின் வாகனமும் கடந்து சென்றது. வேறு யாராவது இருந்தால் ஆம்புலன்சை நிறுத்தி ஜனாதிபதியின் வாகனத்திற்கு வழி விட்டு இருப்பார்கள்.

ஆனால் இந்த நிஜலிங்கப்பா உண்மையிலேயே ஜனாதிபதியையும் பொருட்படுத்தாமல் செய்த துணிச்சலான காரியத்திற்கு வாழ்த்துக்கள் குவிகிறது. ஆனால் வேலை இருக்குமா என்பதுதான் தெரியவில்லை.