மேற்படிப்புக்கு உதவி கேட்ட சென்னை பெண்ணை, விபச்சாரம் செய் என வசைப்பாடிய நெட்டிசன்கள்!

mgid start

ஜுஹி ஷர்மா சென்னையை சேர்ந்த இளம் பெண், வயது 25. தனது மேற்படிப்புக்காக ஆன்லைனில் கிரௌட் ஃபண்டிங் செய்யும் இணையத்தளம் மூலம் மக்களிடம் உதவி நாடினார்.
அவர் சினிமா சார்ந்து மேற்படிப்பு படிக்க உதவி நாடிய ஒரே காரணத்திற்காக அவரை டிரால் செய்கிறோம் என்ற பெயரில் மிகவும் கீழ்த்தரமாக சில நெட்டிசன்கள் அந்த பெண்ணை அசிங்கப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவு கலைஞர்!

ஜுஹி ஷர்மா ஒரு ஒளிப்பதிவு கலைஞர். இவர் பிளிப்கார்ட் முதலிய பல முன்னணி நிறுவனங்களிடம் பணியாற்றியுள்ளார். இவருக்கு பிலிம் மேக்கர் ஆகவேண்டும் என்பது ஆசை.

இந்திய குழந்தைகள்!

ஜுஹி ஷர்மா நம் நாட்டிலே இந்திய குழந்தைகளின் கல்விசார் மேன்மைக்காக சிம்பிளான படங்கள் எடுக்க விரும்பினார். அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை எளிமையாக கூற அவர் முடிவு செய்தார்.

ப்ரூக்ளின் கல்லூரி!

நியூயார்க் பல்கலைகழகத்தின் ப்ரூக்ளின் கல்லூரியில் ஜுஹி ஷர்மா மூன்று ஆண்டுகள் சினிமா பயில ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால், மூன்று ஆண்டுகள் அங்கு தங்கி பயில இவருக்கு கே=வங்கி கடன் மறுக்கப்பட்டது.

கிரௌட் ஃபண்டிங்!

விஸ்காம், மாஸ்காம், விசுவல் டெக்னாலஜி, சினிமா போன்ற கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்தியாவில் வங்கி கடன் அளிக்க வேண்டும் என்றால் எந்த வங்கியும் பெரிதாக முன்வராது.
வேலைக் கிடைக்குமா? எவ்வளவு ஊதியம் பெறுவாய் என பல கேள்விகள் கேட்டு, நிராகரித்து விடுவார்கள். ஆதலால், கிரௌட் ஃபண்டிங் மூலமாக மக்களிடம் உதவி பெற்று நியூயார்க் செல்ல ஜுஹி முடிவு செய்தார்.

நன்கொடை கிடைக்கிறது!

ஜுஹியின் மேற்படிப்புக்கு நன்கொடை சிலர் வழங்கிவருகின்றனர். ஆனால், அதை சிலர் கேலி, கிண்டல் என்ற பெயரில் அவமதித்தும் வருகின்றனர். சிலர் மிகவும் கீழ்த்தரமாக ஜுஹி ஷர்மாவை வசைப்பாடி ட்வீட் செய்துள்ளனர்.

பிச்சை!

சினிமா பயில செல்கிறார் என்ற ஒற்றை காரணத்திற்காக ஜுஹி ஷர்மாவை இது கேலிக்குரியது. இதற்கு பிச்சை எடுக்கலாம் என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

விபச்சாரம்!

மேலும் ஒரு நபர், இதற்கு விபச்சாரம் செய்யலாம் என அதற்கு பதில் கூறியுள்ளார். பலரும் ஜுஹி ஷர்மா மனம் புண்படும்படியான கருத்துக்கள் பதிவு செய்து டிரால் செய்துள்ளனர்.

மோசடி!

இதெல்லாம் வினோத மோசடி என சிலர் கூறி ட்வீட் செய்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க தான் விரும்பவில்லை என ஜுஹி ஷர்மா தெரிவித்துள்ளார்.

அளவுக்கு அதிகமாக...

தான் அணுகியதற்கு அதிமாகவே பலர் நன்கொடை வழங்கிவிட்டனர். மீத பணத்தை பெண் பிலிம்மேக்கர்களுக்கு அளிக்கவுள்ளதாக ஜுஹி ஷர்மா கூறியுள்ளார்.