தத்தெடுத்த பிள்ளைக்காக சொத்தை எல்லாம் விற்று சிகிச்சை பார்க்கும் பெற்றோர்!

mgid start

அசாமில் 7 வயது சிறுவன் ஒருவன் அரிதான நோயின் காரணமாக வயிறு பானை போல் வீங்கி இருப்பதால், கடும் அவதியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

அசாமில் பர்பெட்டா பகுதியில் வசிக்கும் ஷாஹனுர் அலம் என்ற ஏழு வயது சிறுவன்,  அரிதான நோய் காரணமாக வயிறு பானை போல் வீங்கி இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகிறார். கிட்டதட்ட இரண்டு புட் பால் அளவு வீங்கியுள்ள தன்னுடைய வயிறு காரணமாக, சரிவர நடக்க முடியாமலும் , உணவு அருந்த முடியாமலும் படுத்த படுக்கையாகவே உள்ளார் அலன்.

அலம் 7 மாத குழந்தையாக இருக்கும்போது அவரின் ஷமிளா - சலிம் உதின் தம்பதியின் மூலம் தத்தெடுக்கப்பட்டுள்ளார். 5 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்த சிறுவன் 2 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக கடும் அவதிபட்டுள்ளார். ஆரம்பத்தில், சாதாரண பிரச்சனையாக இருக்கும் என கருதிய பெற்றோர், சிறுவனின் வயிறு தொடர்ந்து வீங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பித்த நீர் சுரக்கும் நாளங்களில் ஏற்பட்ட பிரச்சனையில் சிறுவனுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.வறுமையில் தவிக்கும் சிறுவனின் பெற்றோர், அவரது சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வருகின்றனர். சிறுவனின் சிகிச்சைக்காக சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு பெற்றோர்கள் வறுமையில் வாடிவருகின்றனர். 

இந்நிலையில், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய 2 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றும், விரைவில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஷாஹனுர் உயிர் வாழ்வது சந்தேகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக அரசு தரப்பிலும் உதவி வேண்டி அவரின் பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.