ஆஸ்திரேலியாவில் வேகமாக வளரும் இந்து மதம்!

mgid start
இந்தியாவில் உருவான இரண்டு மதங்கள் ஆஸ்திரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்து மற்றும் சீக்கிய மதங்கள் இரண்டும் ஆஸ்திரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 

கடந்த 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது, 2016ம் ஆண்டில் இந்து மதம் கிட்டதட்ட 500 சதவிதம் வேகமாக இந்து மதம் வளர்ந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 129,900 பேர் இந்துக்களாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இது 0.5 சதவிகிதமாக உள்ளது. 
ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களில் 52 சதவிகித மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து 2.6 சதவிதத்துடன் இஸ்லாமிய மதம் இரண்டாம் இடத்திலும், 2.5 சதவித மக்களுடன் புத்த மதம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதனைத் தொடர்ந்து 1.9 சதவிதத்துடன் இந்து மதம் 4வது இடத்தில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் 30 சதவித மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரப்படி இந்து மதம் 4வது இடத்தில் இருந்தாலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்து ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்து மதத்தின் வளர்ச்சி 60 சதவிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.