கள்ளக்காதலியை தேடி வந்தவருக்கு சரமாரி அடி! (வீடியோ)

mgid start
மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில், தனது கள்ளக்காதலியை பார்க்க வந்த நபரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் திருமணமான பெண்ணுடன் சாதிக்கான் என்பவருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு சாதிக் கான் வந்துள்ளார். இதனை பார்த்த அந்த பெண்ணின் கணவர், கிராம மக்களின் உதவியுடன் சாதிக்கானை பிடித்து, மரத்தில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள ராம்பூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.