ஸ்டாலின் போலவே எனக்கும் எல்லாத் தகுதிகளும் இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி

mgid start

தேர்தல் ஆணையம் தன் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வது குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கூறுவது போல் எந்தக் கோப்புகளும் நிலுவையில் இல்லை. நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்டாலின்பேரவைக்குள் நுழைந்த நாளிலேயே நானும் பேரவைக்கு வந்தேன். எனக்கும் எல்லா தகுதிகளும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வது குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை என அவர் தெரிவித்தார். 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.