டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிகாரிகள் காலில் விழுந்த பெண்கள்!

mgid start
குடியாத்தம் அருகே குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, அதிகாரியின் காலில் விழுந்து பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அகற்றபட்ட நிலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் கடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், பெண்கள் உள்ளிட்டோர் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் எதிரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது சம்பவ இடத்திற்க்கு வந்த அதிகாரிகளின் காலில் விழுந்து அப்பகுதி பெண்கள், மனு அளித்தது அங்குள்ளவர்களை நெகிழச் செய்தது.