சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

mgid start
ஈரோடு அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் பணியன் கம்பெனி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த நாகமலை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் பணியன் கம்பெனியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கவுந்தபாடியை சேர்ந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியுள்ளனர். இதனையடுத்து கடந்தாண்டு கோபி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்தி சரவணன் கட்டாய திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவுற்றதை அடுத்து நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு வழங்கினார். சிறுமியை கடத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.

மேலும், பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.