ஆழ் இணையத்தின்(deep web) அந்தரங்கங்கள் - பாகம் 1

mgid start
பல முறை ஆழ் இணையத்தையும் அதில் உள்ள அதிர்ச்சியளிக்கும் இணையங்களையும் பற்றி நம் பக்கத்தில் கண்டு உள்ளோம். இன்று அந்த வரிசையில் நாம் காணப்போவது மிகவும் கொடூரமான ரகசிய இணையம்.
13 முதல் 18 வயதுடையயோர்களை தற்கொலைக்கு தூண்டும் இணையமே இந்த “F-57” (Blue whale என்றும் அழைக்கப்படும்). ரசியாவை மையமாக கொண்டு இந்த ரகசிய குழு இயங்குகிறது.
இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியை போல் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் 13 முதல் 18 வயது இளம் வயதினர் அதிகம் பங்குபெறுகின்றனர். இந்த விளையாட்டில் மொத்தம் 50 கட்டம் உண்டு.
முதல் கட்டம் தன்னை தாமே துன்புறுத்திக்கொள்ள வேண்டும் (Blade ஆள் கையை கீறி கொள்வது போன்று ). இந்த விளையாட்டுக்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். விளையாட்டை அதன் விதி முறைகளை முடிவு செய்வது இந்த“F-57” என்னும் குழுமத்தின் நிர்வாகிகள் தான். முதல் கட்டம் இப்படி தொடங்கி படி படியாக மிகவும் கொடூரமாக செல்லும் அதாவது தெருவில் போகும் தெரியாத ஒருவரை அடிக்க வேண்டும், தங்கள் வளர்ப்பு பிராணியை கொல்லவேண்டும், மிக கோரமாக தங்களை துன்புறுத்தி கொள்ளவேண்டும் என்பது போன்று . 

இதில் கொடுமை என்னவென்றால் அனைத்து கட்டங்களும் நேரலையாகவோ இல்லை புகைப்படமாகவோ அந்த இணையத்தில் விளையாட்டில் கலந்து கொள்பவர்களால் பகிரப்படும். மற்ற போட்டியாளர்கள் குழுவினர் அவற்றை கண்டுகளிப்பர்.
விளையாட்டின் இறுதி கட்டமாக விளையாடுபவர் நேரலையில் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் !
இந்த குழுமத்தின் நிர்வாகிகளும் ஒருவராரான " Philip Budeikin " கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆம் இப்படி பட்ட கொடூர ஆழ் இணையங்களும் இணையத்தில் இருக்கின்றன.
African countries, Russia, Latin, America. Particularly in China, Brazil, Argentina, Venezuela, Spain, Kenya போன்ற நாடுகளில் இளம் வயதினரிடையே இந்த குழுமம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியுள்ளது.
இந்தியாவில் இது போன்ற ஆழ் இணையங்களின் தாக்கம் கூடிய விரைவில் நம் இளைய சமூகத்தை பெரும் சூழ்ச்சியில் கண்டிப்பாக சிக்கவைக்கும்.

மீண்டும் ஒரு ஆழ் இணையத்தின்(deep web) அந்தரங்கங்கள் பாகத்தில் சந்திக்கலாம் 
இந்த கட்டுரை பிடித்தால் நண்பர்களுடன் பகிரவும்..