TRPக்காக ஆர்த்தி செய்த காரியம்! ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கொந்தளிப்பு!

mgid start
 ஜூலியால் தான் டிஆர்பி ஏறுகிறது என்பதை நன்கு புரிந்து கொண்ட பிக் பாஸ் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ கடந்த 25ம் தேதி துவங்கிய போது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், தான் என்னவோ, ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலியானாவை கட்டம் கட்டினார்கள்.
அவ்வளவு தான் உடனே டிஆர்பி ஏகிறியது, அதில் இருந்து அவரையே குறி வைத்தார்கள்.
ஜூலியையே வைத்து நிகழ்ச்சிக்கு TRP ஏத்துறீங்களா என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு சமூக வலைதளங்களில் காறித்துப்பி மீம்ஸ் போட்டனர்.
ஆளாளுக்கு திட்டுவதை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அடுத்து ஓவியாவின் பக்கம் கேமராவை திருப்பினர். ஆனால் ஜூலியை கட்டம் கட்டியபோது எகிறிய TRP ஓவியாவால் எகுறவில்லை.
ஓவியா வேலைக்கு ஆகாது என்று சுதாரித்துக் கொண்டு மீண்டும் ஜூலி பக்கமே விளையாட்டை ஆரம்பித்துள்ளனர். அதற்கு சான்றுபோல் இன்று ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் சக போட்டியாளர்களாக ஆர்த்தி, காயத்ரி ரகுராம், நமீதா ஆகியோர் பேசுகின்றனர். அப்போது, எல்லா கேமராவும் அவளையே தான் பார்க்கணும்னு நினைக்கிறா, அரசியல் தலைவர்களை எல்லாரையும் கெட்ட வார்த்தையால் திட்டினா, நீ போய் கத்திட்டு வந்துட்ட எல்லா பசங்களுக்கும் அடி விழுந்தது என்று கூறிய ஆர்த்தி, எல்லோருக்கும் அடிவிழப் போகுதுன்னு எங்களுக்கு காலை 4.30 மணிக்கே தகவல் வந்து நாங்க எல்லாம் கிளம்பி போயிட்டோம் என்றாள் என்று கூறினார்.