பிக்பாஸ் நிகழ்ச்சி: ரூ.100‌ கோடி கேட்டு நோட்டீஸ்

mgid start
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசியதாகக் கூறி 100 கோடி ரூபாய் கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள காயத்ரி ரகுராம், ‘சேரி பிஹேவியர்’ என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினர்களிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசியதாகக் கூறி 100 கோடி ரூபாய் கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நிலையில் அவர்கள் கேட்கவில்லை. எனவே நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிக்கும், அதில் பங்குபெறும் நடிகர் கமல்ஹாசன், காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கோவையில் கிருஷ்ணசாமி கூறினார். 7 நாட்களுக்குள் முறையாக பதில் அளிக்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.